உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
பேரையூர்,
சேடப்பட்டி அருகே ஆண்டிபட்டி மந்தையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் திருடியதாக 2 சிறுவர்களை கைது செய்தனர்.