மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
கோவில்பட்டியில் மாதர் சங்கத்தினர் நேற்று நூதன போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி, பிப்:
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடந்தது. வள்ளுவர் நகர் முதல் தெருவில் நடந்த இந்த போராட்டத்துக்கு ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் மலர்விழி உமா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நகர பொருளாளர் பழனியம்மாள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு கியாஸ் சிலிண்டரை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து கோஷங்கள் முழங்கினர்.