தூத்துக்குடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-26 16:57 GMT
தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆபேல் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விஜயமூர்த்தி கோரிக்கையை விளக்கி பேசினார்.
போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இயற்கை இடர்ப்பாடு காலத்தில் சிறப்பு படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் குமாரலிங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்