கத்தியை காட்டி வியாபாரிகளிடம் மாமூல் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

கத்தியை காட்டி வியாபாரிகளிடம் மாமூல் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-26 05:45 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை ஐ.சி.எப். நியூ ஆவடி சாலையை சேர்ந்தவர் ஷானுமா (வயது 45). இவர், அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடமும், அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளிலும் வாலிபர் ஒருவர் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டு வருவதாக ஐ.சி.எப். போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வியாபாரிகளிடம் கத்திமுனையில் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் எபினேஷ் சஞ்சய் ராஜ் (வயது 28) என்பதும், அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரிந்தது. மேலும் இவரது தந்தை மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கைதான எபினேஷ் சஞ்சய்ராஜ் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகன் மீது வழக்குப்பதிவு செய்த ஐ.சி.எப். போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்