காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சிலர் தங்களது குழந்தைகளை சுமந்து கொண்டு தீ மிதித்தனர். இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சவுபாக்கிய வரம் பெறுதல், உற்சவ பூர்த்தி மற்றும் மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம் மற்றும் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.