மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Update: 2021-02-25 20:19 GMT
ராஜபாளையம்
ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மக பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதில் திருக்கல்யாணம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றன. இந்த திருவிழாவில் 9-ம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை ராம்கோ குரூப் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்