பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் கோவில் தேரோட்டம்

பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2021-02-25 20:08 GMT
முக்கூடல்:

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடிகை மூன்றீஸ்வரர் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காைல, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. 

தொடர்ந்து சிறப்பு பூஜை, அன்னதானம், தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், தக்கார் சீதாலட்சுமி, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்