அய்யா வைகுண்டர் அவதார தினம்: நெல்லை மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட்திற்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-02-25 20:03 GMT
நெல்லை:
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட்திற்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வு மற்றும் முக்கிய தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு தேர்வுகள் எதுவும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

வேலை நாள்

மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்