குல்பி ஐஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி-மயக்கம்

கீரமங்கலம்
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில், வடமாநிலத்தை சர்ந்த ராஜ்(30) என்பவர் குல்பி ஐஸ் விற்பனை செய்துள்ளார். அவரிடம் சேந்தன்குடியை சேர்ந்த பலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதில், குமணன் மனைவி தென்னலரசிக்கு(வயது 45) நாக்கில் எரிச்சல் ஏற்பட்டதுடன் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ஐஸ் வியாபாரி ராஜை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆலங்குடியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் தான் ஐஸ் எடுத்து வந்து சம்பளத்திற்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து ஐஸ் கம்பெனி முதலாளி போலீஸ் நிலையம் வந்து இனி இதுபோல் நடக்காது. பழைய ஐஸ்களை விற்பனைக்கு அனுப்பமாட்டோம் என்று எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பெட்டியில் இருந்த காலாவதியான ஐஸ்கள் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.