சிவந்திபுரத்தில் கபடி போட்டி
சிவந்திபுரத்தில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் நாடார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். போட்டியை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் மருதப்பப்புரம் ரஞ்சித் அணி முதல் இடமும், கீழப்பாவூர் அணி 2-வது இடமும், ராமையன்பட்டி பிரபாகரன் அணி 3-வது இடமும், இசக்கி சுப்பையா அணி 4-வது இடமும், சிவந்திபுரம் பி.ஆர்.சி. அணி 5-வது இடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் விக்கிரமசிங்கபுரம் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி முதல் இடமும், காளத்திமடம் தென்றல் ‘பி’ அணி 2-வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ரொக்க பரிசு, சுழற்கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் சிவந்திபுரம் கோபிநாத், முருகேசன், ராமச்சந்திரன் (முருகன்), மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, ஆசிரியர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மூர்த்தி தொகுத்து வழங்கினார்.