திருப்பத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-02-25 18:46 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் நூர்முகமது, ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சஸ்லின் என்கின்ற கலாவதி (வயது 28). 

கணவன் - மனைவிக்கு இடைேய குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கலாவதி பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்