கம்பத்தில்கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
கம்பத்தில்கூட்டுக்குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தரையில் இருந்து 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
கம்பம்:
கம்பம் நகரின் மையப்பகுதியான அரசமரம் என்னுமிடத்தில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு வயர்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களும் அங்கு பதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாலம் கட்டும் பணியின்போது, கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர், உடைந்த குழாயை அகற்றிவிட்டு புதிதாக குழாய்களை பொருத்தினர். அதன்பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு திடீரென கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தரையில் இருந்து 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
மேககூட்டம் தரை இறங்கியதைபோலவும், புகை மூட்டம் ஏற்பட்டிருப்பதை போலவும் தண்ணீர் பொங்கி வழிந்தது. கண்களை கொள்ளை கொண்ட அந்த காட்சியை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
மேலும் இந்த காட்சி அருகே உள்ள கடைகளில் பொருத்தியிருந்த கண்காணிப்புகேமராவில் பதிவானது. அந்த வீடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுபற்றி அறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தி விட்டு, குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
--------