குருவார வழிபாடு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஆலங்குடி குருபகவான்
தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஆலங்குடி குருபகவான் அருள்பாலித்தார்.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.