தட்டார்மடத்தில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
தட்டார்மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்தநாள்
தட்டார் மடத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை, சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமை தாங்கினார். சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பொன்.முருகேசன், மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி, சாத்தான்குளம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஆனந்தராஜா, புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பால மேனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஞானபிரகாசம் வரவேற்று பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள், தையல் எந்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங் ்கள் போன்றவை வழங்கப்பட்டது.
தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், கட்சிப் பேச்சாளர்் ஸ்ரீராம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன்,கட்சி பொறுப்பாளர் அந்தோணி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சியினர் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வேல்வழங்கி வரவேற்றனர். விவசாய அணி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
ஆழ்வார்திருநகரி
மேலும், ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து பகுதியில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜநாராயணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வ. உ .சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், உதவி பொறியாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.