ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பரபரப்பு
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பரபரப்பு.
பந்தலூர்,
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்குள் நேற்று மதியம் காட்டுயானை ஒன்று புகுந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர் தம்பகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் கூச்சலிட்டு தேவகிரி வழியாக வனப்பகுதிக்குள் காட்டுயானையை விரட்டியடித்தனர். இதேபோன்று உப்பட்டி அருகே புஞ்சைவயல் பகுதிக்குள் புகுந்த காட்டுயானையும் விரட்டியடிக்கப்பட்டது.