நகை மதிப்பீட்டாளர் கொரோனாவுக்கு பலி

ஆரணியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-02-25 11:30 GMT
ஆரணி

ஆரணியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் கொரோனாவுக்கு பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 48),  ஆரணியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.

 இவர் பித்தப்பை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
இதையடுத்து ஆரணி நகராட்சி மூலமாக புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள மயானத்தில் பெரிய பள்ளம் எடுக்கப்பட்டு உறவினர்களை சற்று தொலைவில் நிற்க வைத்து இறந்தவரின் உடலை புதைத்தனர்.

 ஆரணியில் நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் கொரோனா தொற்றால் இறந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்