கொளத்தூர் அருகே மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்
கொளத்தூர் அருகே மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொளத்தூர்:
கொளத்தூர் அருகே மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்கல்லூர் மேட்டு பளையூர் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று காலை யாகசாலையில் இருந்து அருட்சக்தி குடம் புறப்பட்டு, விநாயகர், மத்தூர் மாரியம்மன், விமானம், மற்றும் நவகிரகங்களுக்கு சிவாச்சாரியார்களால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பக்தர்கள் திரண்டனர்
இதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் மாரப்பன், குமார் மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.