வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

Update: 2021-02-24 21:26 GMT
வாடிப்பட்டி,பிப்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஜெ.புதுப்பட்டியை சேர்ந்த இருளாண்டி (வயது 31), அவரது மனைவி உமா மகேஸ்வரி (23) மற்றும் குடும்பத்தினர் மானாமதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காலை புறப்பட்டனர். வேனை நிலக்கோட்டையை சேர்ந்த இளையராஜா (33) என்பவர் ஓட்டி வந்தார். வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பிரிவில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென வேன் நிலைதடுமாறி நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி ரோட்டில் கவிழ்ந்து உருண்டது. இதில் வேனில் பயணம் செய்த 11 பேரும் காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பையா (55) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்