பாளையங்கோட்டையில் தலையாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தலையாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை, பிப்:
தலையாரிகள் எனப்படும் கிராம உதவியாளர்களை நான்காம் நிலையான 'டி பிரிவு' ஊழியர்கள் தரம் உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் வேல்பாண்டி, துணை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் முத்தையா, நெல்லை மாவட்ட தலைவர் பரமசிவன், செயலாளர் முருகன், பொருளாளர் நாராயணன், மகளிர் அணி செயலாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்ட தலைவர் சொள்ளமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் கோமதிராம், துணைத்தலைவர் தங்கம், துணைச் செயலாளர் மேலவாசி, இணைச்செயலாளர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாங்குநேரி வட்டக்கிளை தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கர், செயலாளர் அழகு முருகன், பொருளாளர் சண்முக குமாரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் மானூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் கண்ணையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.