மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-02-24 19:53 GMT
ராஜபாளையம், 
சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மாரியம்மன் கோவில் 
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம்  கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு ஏ.கே.ஆர். குரூப்ஸ் உரிமையாளர்கள் காமராஜ், ராஜ் பிரியம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தலைமை தாங்கினர். 
ராஜபாளையம் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை திருப்பணிக்குழு தலைவர் காசி கனி, செயலாளர் தங்கப்பன், பொருளாளர் காண்டீஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
சாமி தரிசனம் 
இதில் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்