பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-02-24 19:35 GMT
திருச்சி, 
திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் காமராஜ் நகர்சூரன்சேரி பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50). இதுபோல வரகனேரி எடத்தெரு ரோடு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்தவர் வைத்தான் என்கின்ற சுதாகர் (41). இவர்கள் இருவரும் காந்தி மார்க்கெட் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்றதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவர் மீதும் தொடர் குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். 
இதுபோல், வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருச்சி செந்தண்ணீர்புரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த விஜய் (23) மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பது தெரியவந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்