3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்சி,
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.