காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2021-02-24 18:45 GMT
கரூர்
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த படி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக வேண்டும் அகவிலைப்படி யுடன் கூடிய ஓய்வூதியம், மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும், உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, மாவட்ட மற்றும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்