வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-02-24 18:43 GMT
கரூர்
அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர்கள் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு இப்பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடன் தீர்வு காண வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், பொன்ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்