தனியார் தோட்டத்தில் தீ
கொடைக்கானல் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவிய போதிலும் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள், புற்கள், புதர்கள் ஆகியவை கருகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கொைடக்கானலை அடுத்த வடகவுஞ்சி அருகே பழனி சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன்காரணமாக அப்பகுதியில் இருந்த மரங்கள், புற்கள், புதர்கள் ஆகியவை தீயில் கருகின. மேலும் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று தீ பரவலை கட்டுப்படுத்தினர்.