மாசிமக திருவிழா தேரோட்டம்
ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் மாசிமக திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் மாசிமக திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டம்
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் மாசி மகத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் ரணபலி முருகன், வள்ளி-தெய்வானையுடன் அன்ன வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், மயில் வாகனம், புஷ்ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பச்சை சாத்துதல் சிவப்பு சாத்துதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
தீர்த்தவாரி
தொடர்ந்து மறுதினம் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, ஆலய கண்காணிப் பாளர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.