ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-02-24 17:13 GMT
திண்டிவனம், 

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று காலை 7:45 மணிக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் திண்டிவனம் ரெயில்நிலையத்திற்குள் வந்த போது, தண்டவாளம் அருகே நின்றிருந்த 45 வயதுடைய ஆண் ஒருவர், திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது உடல் பாகங்கள் தண்டவாள பகுதியில் சிதறி கிடந்தன. 

 இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இறந்தவரின் முகம் சிதறியதால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்