பெருந்துறை அருகே விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விபரீத முடிவு

பெருந்துறை அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2021-02-21 21:35 GMT
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாவடி வீதியை சேர்ந்தவர் சுகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர் விஜயமங்கலத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு தாரணி (22) என்ற மகளும், சந்தோஷ் (16) என்ற மகனும் உள்ளனர். இதில் தாரணி பி.எஸ்சி. முடித்து உள்ளார். சந்தோஷ் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தாய்- தந்தை 2 பேரும் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் தனியே இருக்கும் தாரணி, வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல், டி.வி. பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் தாரணியை அவருடைய தாய் பார்வதி கண்டித்ததாக கூறப்படுகிறது இதில் ஆத்திரம் அடைந்த தாரணி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தாரணி இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்