சாத்தூர்,
சாத்தூர் அருகே ஓ.மேட்டுபட்டியில் இருந்து ஸ்ரீ ரெங்காபுரம் செல்லும் சாலையில் சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். சரக்கு ஆட்டோவில் இருந்த மற்றொரு நபரிடம் விசாரித்தபோது ஓ.மேட்டுபட்டியை சேர்ந்த ராஜா (வயது49) என்பதும், தப்பி ஓடியது அவரது மகன் கருப்பசாமி என்பதும், இவர்கள் இருவரும் ஸ்ரீ ரெங்காபுரம் ஆற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ராஜாவை கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் 80 மூடை மணலையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர்.