பெரியகாண்டி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

பெரியகாண்டி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

Update: 2021-02-21 20:03 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை அருேக கள்ளப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய காண்டி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதனையொட்டி கருப்பத்தூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர் விநாயகர், பெரியகாண்டியம்மன், ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவிய, பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலின் முன்பு அமைந்துள்ள யாக குண்டத்தில் விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. ஹோமத்தினை கரூர் முரளி சிவாச்சாரியார் குழுவினர் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்