குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்
குறுங்காடு அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரங்களின் நண்பர்கள் அமைப்பு மூலம் குறுங்காடு அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் ரத்னா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மாணவர்கள் மூலம் யோகா, சிலம்பம், கராத்தே, ஜூடோ போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பசுமை சார்ந்து இயங்கும் அமைப்புகளுக்கு பசுமை சேவை விருதுகளும், மாணவர்களுக்கு புத்தகம், துணிப்பை ஆகியவையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் அருகே உள்ள கோவில் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ஜீவாவின் மகன் புவனேஸ்வர் என்ற 5 வயது சிறுவன் கலந்து கொண்டு சிலம்பம், சுருள் வாள் வீச்சு உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து காட்டினான். விழாவில் செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.