விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

Update: 2021-02-21 18:44 GMT
ஜெயங்கொண்டம்:
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெயங்கொண்டம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர், சிலால் கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவுக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும், ஒப்பந்த விவசாய முறையினால் பெருமுதலாளிகளுக்கு விவசாயிகள் அடிமையாக நேரிடும் என்றும் கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்