தேன்கனிக்கோட்டையில் தீக்குளித்து பெண் தற்கொலை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

தீக்குளித்து பெண் தற்கொலை

Update: 2021-02-21 17:39 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து ெகாண்டார். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஹயாத். இவருடைய மனைவி ஹர்சியா (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த ஹர்சியா, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ஹர்சியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமான 6 ஆண்டுகளில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்