புதிய ரேஷன் கார்டு வழங்காமல் பொதுமக்கள் அலைக்கழிப்பு

ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர் என்று தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-02-21 17:18 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர் என்று தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
மனு
ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர் தீன், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- 
ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களை தாலுகா அலுவலகத்தில் கணினி பிரிவில் உள்ள அலுவலர்கள் தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். விண்ணப்பதாரர்களிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பே மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
அதன் பின்னர் எத்தனை முறை சென்று கேட்டாலும் சரியான பதில் அளிப்பதில்லை. ஆனால் இடைத்தரகர்கள் மூலம் அணுகுபவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழஙகப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
சிறப்பு முகாம்
இதனால் ஏராளமானோர் ரேஷன் கார்டு பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு முகாம் நடத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்