சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2021-02-21 15:57 GMT
ராமநாதபுரம், 
அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்யாதுரை தலைமை தாங்கினார். சுடலைக்காசி, குமார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவாஜி, மலைராஜன், தனுஷ்கோடி, பூமிநாதன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்