வைக்கோல் எரிந்து நாசம்

வைக்கோல் எரிந்து நாசம்

Update: 2021-02-20 21:01 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள களத்தில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்த பின்பு மாட்டுத்தீவனமாக பயன்படும் 50 வைக்கோல் படப்பினை வைத்திருந்தனர். இந்தநிலையில் திடீரென இங்குள்ள மூன்று படப்பு தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தரம், ஆறுமுகம், சீதாராமன் ஆகியோருக்கு சொந்தமான படைப்புகள் என்றும் இதன் சேத மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது எவ்வாறு தீப்பிடித்தது என்பது பற்றி சேத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்