பெருமாநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
பெருமாநல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஈட்டிவீரம்பாளையத்திலுள்ள ஏ.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 33). பனியன் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீசில் சிவகுமார் புகார் செய்தார்.
மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கவுதம் (20) நேற்று காலை, தனது மோட்டார்சைக்கிளில் குருவாயூரப்பன் நகர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி கவுதமை தள்ளிவிட்டு அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக கவுதம் பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டவர், பசுமைநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் அவரை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.