திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், பிப்.21-
பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சன் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசை கண்டித்தும் பேசினர். முன்னதாக பலூன்களையும் பறக்கவிட்டனர். சிலிண்டர் வடிவில் பதாைககளை கைகளில் ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.