மாநில அளவிலான இறகு பந்து போட்டி

மாநில அளவிலான இறகு பந்து போட்டி

Update: 2021-02-20 20:03 GMT
மதுரை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை மதுரை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கு பெற்றனர். அதன்படி தமிழகத்தில் 37 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசு ஒரு லட்சமும், 2-வது பரிசு 75 ஆயிரமும், 3-வது பரிசு 50 ஆயிரம் என மொத்தம் 18 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை நடந்தது. 
இதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின், விடுதி மேலாளர் ராஜா, இறகு பந்து கழக செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச்செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதி போட்டிகள் நாளை (திங்கள்கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்