நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-02-20 19:40 GMT
நாமக்கல்:
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். குடும்ப நலநிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இணை செயலாளர் நல்லாகவுண்டர் தலைமை தாங்கினார்.
கோஷம்
இதில் மத்திய அரசுக்கு இணையாக மருத்துவ படியை ரூ.300-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
இதில் மாவட்ட செயலாளர் கணபதி, பொருளாளர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்