மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

தொழுகைக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-20 19:26 GMT
ஆலங்குடி,பிப்.21-
தொழுகைக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.
தாக்குதல்
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் ரகுமான் (வயது 16). சம்பவத்தன்று தந்தையும், மகனும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றனர். பின்னர் தொழுகை முடிந்து வந்தபோது, மர்ம ஆசாமிகள் சிலர் ரகுமானை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகுமானை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
மேலும் ரகுமானை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்