தோட்டக்கலைத்துறை அலுவலர் மயங்கி விழுந்து சாவு
திருப்பூா் கலெக்டா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை துறை அலுவலா் மயங்கி விழுந்து பாிதாபமாக இறந்தாா்.
திருப்பூா்:
திருப்பூா் கலெக்டா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை துறை அலுவலா் மயங்கி விழுந்து பாிதாபமாக இறந்தாா்.
தோட்டக்கலை துறை உதவி அலுவலா்
திருவண்ணாமலை மாவட்டம் மேலநெமிலி மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (வயது 38). இவா் திருப்பூா் மாவட்டம் வெள்ளகோவிலில் உதவி தோட்டக்கலை துறை அலுவலராக பணியாற்றி வந்தாா். நேற்று திருப்பூா் கலெக்டா் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை சாா்பில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதற்காக சுரேஷ் நேற்று காலை திருப்பூா் கலெக்டா் அலுவலகத்துக்கு கோப்புகளுடன் வந்திருந்தாா்.
மயங்கி விழுந்து சாவு
இந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதை பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் சுரேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
பின்னா் ஆம்புலன்சு மூலம் திருப்பூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பாிசோதனை செய்த டாக்டா்கள் அவா் ஏற்கனவே உயிாிழந்துவிட்டதாக தொிவித்தனா். மேலும், இதுகுறித்து திருப்பூா் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் உயிாிழந்தது குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கலெக்டா் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிாிழந்த சுரேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டக்கலை துறையில் பணியில் சோ்ந்ததாகவும், அவருக்கு மனைவி, ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளதாக ஊழியா்கள் தொிவித்தனா். திருவண்ணாமலையில் உள்ள குடும்பத்தினருக்கு சுரேஷ் உயிாிழந்தது குறித்து தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை அலுவலா் கலெக்டா் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிாிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.