பாடத்திட்டத்தை தொழில்துறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்

பாடத்திட்டத்தை தொழில்துறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று பயிற்சி பட்டறையில் பேராசிரியர் சரவணன் பேசினார்.

Update: 2021-02-20 18:24 GMT
காரைக்குடி,

பாடத்திட்டத்தை தொழில்துறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று பயிற்சி பட்டறையில் பேராசிரியர் சரவணன் பேசினார்.

பயிற்சி பட்டறை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சர்வதேச வணிகத்துறை, டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் நிதி உதவியுடன் ஆராய்ச்சி முறைகள் மற்றும் தரவு பகுப்பாய்வு குறித்த 10 நாள் பயிற்சிப்பட்டறையின் தொடக்க விழா பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சர்வதேச வணிகத்துறை தலைவர் முத்துச்சாமி வரவேற்றார். 
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசும் போது,ஆராய்ச்சி என்பது எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு துறையாகும். ஆராய்ச்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதனைப்பற்றிய அறிவை புதுப்பித்துக் கொள்வது அவசியம். ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் ஒரு சிறந்த பார்வையாளராக நல்ல வாசகராக இருக்க வேண்டும். அவர்கள் இறுதியில் தன்னை ஒரு நல்ல நிர்வாகியாக மாற்றிக் கொள்வார் என்றார்.

பாடத்திட்டம்

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிதி துறை பேராசிரியர் சரவணன் பேசும் போது, சமூகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வை வழங்கக் கூடிய சமூக அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்வது அவசியம். மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தொழில்துறையில் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்மையர் நாராயணமூர்த்தி, மேலாண்மைபபுள்ஸ் முதன்மையர் செந்தில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் செய்திகள்