ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
சோளிங்கர் பகுதியில் நிரம்பிய நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர். எனவே நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்
சோளிங்கர் பகுதியில் நிரம்பிய நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர். எனவே நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ‘நிவர்’, புரெவி புயல்களின்போது பெய்த புயல் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதாலும் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து விளையாடி வருகின்றனர்.
பல ஏரிகளில் புதை மணல் உள்ளது.சோளிங்கர் கால்நடை மருத்துவனை அருகே உள்ள நந்திஆறு, மற்றும்ஏரி குட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் தற்போது அதிகமாக தண்ணீர் இருப்பதால் சிறுவர்கள் குளிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் அவர்களின் நலன கருதி எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.