கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு

கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கள்ளக்குறிச்சி சப்-கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்

Update: 2021-02-20 16:20 GMT
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் வட்டத்துக்குட்பட்ட பரமநத்தம், கல்லேரிகுப்பம், அணைக்கரைக்கோட்டாலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சங்கராபுரம் வட்டத்துக்குட்பட்ட அணைக்கரைக்கோட்டாலம், அரசம்பட்டு, கடுவனூர், மோகூர், பரமநத்தம், பீளமேடு, சங்கராபுரம் ஆகிய 7 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பவதற்கு கடந்த டிசம்பர் மாதம் சங்காரபுரம் தாலுகா அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து 7 பணியிடங்களுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே இந்த பணி நியமன ஆணையை ரத்து செய்து தகுதியான நபர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

மேலும் செய்திகள்