முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் கபடி கழக சார்பில் சோனை மீனாள் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.கபடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கபடி குழு தலைவர் ரங்கநாதன் செய்திருந்தார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தர்மர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், பூவலிங்கம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராமர், புவனேஸ்வரன், நகர தலைவர் சுரேஷ் காந்தி, வர்த்தக சங்க தலைவர் ராமபாண்டி, வைத்தியநாதன் போஸ், ஊராட்சி தலைவர்கள் விளங்குளத்துர் கனகவல்லி முத்துவேல், கீரனூர் ஜோதி முனியசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் போஸ், வெண்ணீர் வாய்க்கால் சந்திரபோஸ், முன்னாள் நகர் தலைவர் சண்முகம் மற்றும் கல்லூரி முதல்வர் உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.