ஆபத்தான நிலையில் மின்கம்பம்

ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது

Update: 2021-02-20 15:26 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள குமார குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்கம் கிராமத்துக்கு செல்லும் ரோட்டின் அருகில் வயல்வெளியில் மின்கம்பம் சாய்ந்தும், மின் கம்பிகள் தாழ்வாகவும் செல்கின்றன. இதனால் பல பகுதிகளில் விபத்து அபாயம் உள்ளது. இந்நிலையில் இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் அதிக காற்று வீசினாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே  சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குமாரகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில் கூறியதாவது:- பலமுறை மின் வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்