ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் காதர்பள்ளிவாசல் தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது ரூ.1,600 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்து லாட்டரி விற்று வைத்திருந்த ரொக்க பணம் ரூ.12 ஆயிரத்து 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக யானைக்கல்வீதி வடக்குத்தெருவை சேர்ந்த அங்குராஜா (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரஜினி நாகராஜ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.