அரசு பேருந்து மீது பள்ளிக்கூட பஸ் மோதல்

நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2021-02-20 13:43 GMT

நாட்டறம்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஏரிக்கோடி பஸ் நிறுத்தம் சென்றபோது பயணிகள் இறங்குவதற்காக நிறுத்தப்பட்டது.

அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளிக்கூட பஸ் அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் பள்ளிக்கூட பஸ்ஸின் முன்புறம் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பள்ளிக்கூட பஸ்சில் இருந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்