பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு கூட்டம்
மயிலாடும்பாறையில் பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு கூட்டம் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கலந்துகொண்டார்
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் நேற்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்டமாக கடமலைக்குண்டு அருகே சிதம்பரவிலக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.ஐ.ஜி அங்கிருந்த முதியவர்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் 1 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் மயிலாடும்பாறையில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் கலந்து கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிராமப்புற காவலர் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் பேசினார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கடைசியாக வருசநாடு, கடமலைக்குண்டு ஆகிய போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்பாண்டி, சதீஷ்குமார், ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.